Posts

பாசூர் சின்ன மடம் (மேல்கரைப் பூந்துறை நாடு)

Image
              ஶ்ரீகுலகுருப்யோ  நம :                 ஸ்ரீ பரமகுருப்யோ நம :                ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம :                    ஸ்ரீ பராபர குருப்யோ நம :                     ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் துணை                  ஸ்ரீ கவிராஜ குருப்யோ நம:    பாசூர் சின்ன மடம் (மேல்கரைப் பூந்துறை நாடு) ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபனாசார்ய மந்த்ர சாஸ்த்ர  நிரத ஸத்யோஜாத    ஞான  சிவாசார்ய   குருசுவாமிகள் பாசூர்மடம் தீக்ஷதர்கள் வரலாறு:          கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாட்டு காராள ,  காணியாள வெள்ளாளர்களுக்கும் ,  கொங்க பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும் குலகுரு மடமாக பாசூர்மடம் ஆதிகாலம்தொட்டு விளங்கி வருகிறது. சேரதேசமாகிய கொங்கதேசத்தில் அனைத்து மடங்கள், ஆசாரியர்களுள் தொன்றுதொட்டு நிலவிவரும் பாரம்பரியத்தின் ஆணிவேராகவும், அச்சாரமாகவும் விளங்கி வரும் மடம். இதன் தலைமை பீடம் பாசூர் ஸத்யோஜாத மடம். தீக்ஷதர்களே நமது சேர தேசத்தில் வைதீக ஆகமங்களையும், பாசுபத மார்க்கத்தையும், போதாயன சூத்திரத்தையும் காத்து பாடசாலைகள் அமைத்து பிரதிஷ்டாசாரியர்களாக இருந்தவர்கள். வைதிக ஆகம பாசுபதமே பாரதத்தின் ஆதி மதம